சினிமா

தனுஷ் மாதிரி ஆனா தனுஷ் இல்ல… வைரலாகும் க்யூட் புகைப்படம்…

Published

on

தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் தனுஷ். சிறந்த நடிகர் என பெயர் எடுத்தவர். ஒருபக்கம் பொழுதுபோக்கு அம்சம் உள்ள கமர்ஷியல் படங்களிலும், ஒருபக்கம் சிறந்தை கதையம்சம் கொண்ட படங்களிலும் அவர் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படம் சிறந்த நடிகர் மற்றும் இயக்குனருக்கான விருதுகளை பெற்றுள்ளது.

தனுஷ் ரஜினியின் மூத்தமகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கடந்த 2014ம் ஆண்டு நடந்தது. தற்போது இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். இதில், யாத்ரா மூத்தவர். அவருக்கு தற்போது 15 வயது ஆகிறது. அவர் சிறுவயதாக இருக்கும் போது சில புகைப்படங்கள் வெளியானது. ஆனால், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், நேற்று பிறந்தநாள் கொண்டாடிய அவரின் புகைப்படத்தை அவரின் தாய் ஐஸ்வர்யா பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருந்தார். இதைபார்த்த பலரும் அவர் தனுஷ் போலவே இருக்கிறார். முதலில் தனுஷ்தான் என நினைத்து விட்டோம் என ஆச்சர்யமாக பதிவிட்டு வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version