சினிமா செய்திகள்

படுகாயம் அடைந்த நடிகர் ஆர்யா… படப்பிடிப்பின் இடையே விபரீதம்!

Published

on

நடிகர் ஆர்யா படப்பிடிப்பின் இடையே காயம் அடைந்ததால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நடிகர் ஆர்யா தற்போது நடிகர் விஷாலின் எனிமி படத்தில் நடித்து வருகிறார். விஷால் நாயகனாக நடிக்க அதற்கு ஈடான வில்லன் கதாபாத்திரத்தில் ஆர்யா நடிக்கிறார். எனிமி படப்பிடிப்பு தற்போது பூந்தமல்லியில் உள்ள ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

விஷால் மற்றும் ஆர்யா இடையே நடக்கும் சண்டைக் காட்சியை படமாக்கும் போது இருவருக்கும் கைகளில் அடிப்பட்டது. விஷாலுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனால், ஆர்யாவுக்கு பெரிதாக அடிபட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அளித்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கு பின்னரும் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என ஆர்யா வந்துவிட்டாராம்.

ஆர்யாவுக்கு சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. கூடுதலாக தெலுங்கு மொழியில் நடிகர் அல்லு அர்ஜுனின் படம் ஒன்றிலும் ஆர்யா வில்லனாக நடித்து வருகிறார்.

seithichurul

Trending

Exit mobile version