சினிமா செய்திகள்

யாரும் ஏமாற வேண்டாம் : நடிகர் அருண்விஜய் திடீர் பதிவு

Published

on

சமூகவலைத்தளங்களில் தன் பெயரில் வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என நடிகர் அருண்விஜய் கூறியுள்ளார்.

நடிகர் விஜய்குமாரின் ஒரே மகன் நடிகர் அருண்விஜய். பிரபலமான நடிகருக்கு மகனாக இருந்தாலும் தன் சொந்த உழைப்பின் மூலமாகவே தமிழ் சினிமாவில் தனது முத்திரையை பதித்து உள்ளார்.

ஆரம்ப காலங்களில் வழக்கமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த அருண்விஜய்க்கு, அஜித் படமான என்னை அறிந்தால் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் அவர் நடித்த விக்டர் என்ற வில்லன் கதாப்பாத்திரம் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று உள்ளது.  அருண்விஜய் தற்போது அறிவழகன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்கிறார்.

இந்நிலையில் அறிவழகன் படத்தில் நடிப்பதற்கு நல்ல அழகான இளம்பெண்கள் வேண்டும் என்றும் விருப்பம் உள்ளவர்கள் புகைப்படங்களை அனுப்பலாம் என்று சமூகவலை தளங்களில் விளம்பரம் வெளியானது.

இதை பார்த்த அருண்விஜய் இது போன்ற விளம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம் எனவும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். மேலும், இதுபோல் வரும் போலி வேலைவாய்ப்புகளை புறக்கணியுங்கள், எதையும் உறுதிசெய்த பிறகே முடிவெடுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Trending

Exit mobile version