சினிமா
கொரோனவால் பாதிக்கப்பட்ட நடிகர் அர்ஜூன்… திரையுலகினர் அதிர்ச்சி…
2 வருடங்களுக்கு முன்பு உருவான கொரோனா வைரஸ் இந்தியாவில் இன்னும் குறைந்தபாடில்லை. தமிழகத்திற்கு அருகில் உள்ள கேரள மாநிலத்தில் அதிகமான பேர் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் நடிகர்களும் தப்பவில்லை. பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என பல நடிகர், நடிகைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டனர். பலரும் உயிரிழந்தனர். தமிழ் சினிமாவிலும் சில நடிகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தனர்.
சமீபத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். ஒரு வார சிகிச்சைக்கு பின் அவர் அதிலிருந்து மீண்டார்.
இந்நிலையில், தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவருமான நடிகர் அர்ஜூன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். அர்ஜூன் தொலைக்காட்சி நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.
தற்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.