சினிமா செய்திகள்

ஹீரோ ஆனார் நடிகர் அர்ஜுன் தாஸ்… பிரபல இயக்குநர் யார் தெரியுமா?

Published

on

துணை நடிகர் ஆக ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துள்ள நடிகர் அர்ஜுன் தாஸ் தற்போது புதிய படம் ஒன்றில் ஹீரோ ஆக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

கைதி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகர் அர்ஜுன் தாஸ். கைதி படத்தில் சிறிது நேரமே திரையில் தோன்றினாலும் தனது குரலால் ரசிகர்களை வளைத்துப் போட்டுவிட்டார் அர்ஜுன் தாஸ். அதன் பின்னர் கைதி படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜே அடுத்து தளபதி விஜய்-ன் மாஸ்டர் படத்தை இயக்க அதிலும் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்து தனது ரசிகர்கள் வட்டத்தை பெரிதுபடுத்தி உள்ளார்.

தற்போது அர்ஜுன் தாஸ் ஹீரோ ஆக புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அர்ஜுன் தாஸை ஹீரோவாகக் கொண்டு இயக்குநர் வசந்தபாலன் தான் படம் தயாரிக்க உள்ளார். இயக்குநர் வசந்தபாலன் புதிதாக அர்பன் பாய்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார். அந்த நிறுவனத்தின் முதல் படத்திலேயே ஹீரோ ஆகியுள்ளார் அர்ஜுன் தாஸ்.

இந்தப் படத்தின் பெயர், நடிகர்கள் குழு, இயக்குநர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் விரைவில்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version