சினிமா செய்திகள்

தமிழ் திரையுலகின் நடிகர்-இயக்குனர் ஆர்.என்.ஆர். மனோகர் காலமானார்!

Published

on

தமிழ் திரை உலகின் நடிகர் இயக்குனர் ஆர்.என்.ஆர். மனோகர் இன்று திடீரென மாரடைப்பால் காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் அவர்களிடம் ஒரு சில படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆர்.என்.ஆர். மனோகர். இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் மாசிலாமணி, வேலூர் மாவட்டம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக எம்பி ஆர்.என்.ஆர். இளங்கோ அவர்களின் சகோதரரான இவர் பல திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக அஜித் நடித்த வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று திடீரென மாரடைப்பு காரணமாக நடிகர் ஆர்.என்.ஆர். மனோகர் காலமானார். அவருக்கு வயது 61 என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் ஆர்.என்.ஆர். மனோகர் குடும்பத்திற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version