சினிமா செய்திகள்

பிரபல மாஸ் நடிகருக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Published

on

மாஸ் நடிகர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் பெரும் கவலையுடன் உள்ளனர்.

தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகில் உள்ள பல பிரபலங்களுக்கு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதித்துக் கொண்டு வருவதையும் அதன் பின் அவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வருவதை பார்த்து வருகிறோம். எஸ்பிபி, தாமிரா உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பதும் சோகமான செய்தியாகும்.

6) அல்லு அர்ஜூன்

இந்த நிலையில் தற்போது தெலுங்கு திரையுலக மாஸ் நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது, ‘எனக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். நான் அனைவரிடமும் வேண்டி கேட்டுக் கொள்வது என்னவென்றால் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

மேலும் எனது ரசிகர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் எனக்கு கவலைப்படும்படி எதுவும் இல்லை. நான் நன்றாகவே இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜூன் அவர்களுக்கு கொரோனா என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version