சினிமா செய்திகள்

வலிமை படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய தல!

Published

on

வலிமை படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய தல அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கி வரும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைத் தொடர்ந்து அஜித்தை வைத்து போனி கபூர் தயாரிக்க, எச்.வினோத் இரண்டவது முறையாகத் தொடர்ந்து இயக்கி வரும் திரைப்படம் வலிமை.

கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வலிமை படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

10 நாட்கள் முன்பு வலிமை படத்தின் முக்கிய சண்டை காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அதில் தல அஜித்துக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கொண்ட அஜித் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு அந்த காட்சியை முடித்துக்கொடுத்துள்ளார்.

இப்போது சென்னை திரும்பியிருக்கும் அஜித், நலமுடன் உள்ளதாகவும், படக்குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version