இந்தியா

ஓராண்டுக்கு மேலாக உடல்நல பாதிப்பு – பிணை கிடைக்காமல் உயிரிழந்த 84 வயது செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி!

Published

on

பிரபல செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் வாடி வந்த நிலையில், இன்று உடல்நல பாதிப்பு காரணமாக காலமானார். அவர் பழங்குடியின மக்களுக்காக 50 ஆண்டுகளுக்கு மேலாக களத்தில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த பீமா கொரேகன் சம்பவத்தையொட்டி கடும் சட்டங்களுக்குக் கீழ் கைது செய்யப்பட்டார் சுவாமி.

அவர் மட்டுமல்லாமல் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய பல செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு இன்னும் வழக்கு நடத்த முடியாமல் சிறையில் வாடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அனைவருக்கும் நக்சல்பாரி இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என்றும் அரசு தரப்பில் முத்திரைக் குத்தப்பட்டு உள்ளது.

கடந்த பல மாதங்களாக ஸ்டான் சுவாமி, தன் உடல் நிலை குன்றி வருவதாகவும், பிணை கொடுக்கவில்லை என்றால் கண்டிப்பாக உயிரிழக்க நேரிடும் என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தில் சொல்லி வந்தார். இருப்பினும் அவர் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ, சுவாமியின் உடல் நலத்தில் பாதிப்பு இருப்பதாக கருதவில்லை என்று கூறி வந்தது.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக அவர் மரணமடைந்து உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version