இந்தியா

டிசம்பர் 31க்குள் முடிவடைந்த கேஒய்சி அப்டேட் அவகாசம்: ரிசர்வ் வங்கி முக்கிய உத்தரவு

Published

on

டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் கேஒய்சி விவரங்களை வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி கிளைக்கு சென்று அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ள நிலையில் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாடிக்கையாளரும் கேஒய்சி என்ற உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள் என்பதை வங்கிக்கு அளிக்க வேண்டும் என்பதும் இதில் வங்கி வாடிக்கையாளரின் அடையாளம், முகவரி மற்றும் தனிப்பட்ட விவரங்கள் அடங்கியிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவை தவறாக பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காக இந்த கேஒய்சி விபரங்கள் பெறப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

வங்கியில் கணக்கு தொடங்கும் போதும், மியூச்சுவல் ஃபண்டு உள்ளிட்ட முதலீடு செய்யும் போதும் கேஒய்சி என்பது அவசியம் என்பதும் அவ்வப்போது வாடிக்கையாளர்கள் இந்த அடிப்படை தகவல்களை அப்டேட் செய்வது அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேஒய்சி விபரங்களை புதுப்பிக்க அல்லது அப்டேட் செய்ய டிசம்பர் 31ஆம் தேதி கடைசி தேதி என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் நேரில் அணுகி கேஒய்சி விவரங்களை தர வேண்டும் என்றும் இல்லையெனில் வங்கி கணக்கு முடக்கப்படும் என்றும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தற்போது கேஒய்சி குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி விவரங்களை பெறுவதற்காக வாடிக்கையாளர்களை வங்கி நேரடியாக அழைக்கக் கூடாது என்றும் அதற்கு பதிலாக கேஒய்சி அப்டேட்களை வங்கிகளின் வீடியோ அழைப்பு மூலமாக சமர்ப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் நேரில் கேஒய்சி விவரங்களை நேரில் வழங்குவதற்கு பதிலாக ஈமெயில், தொலைபேசி, ஏடிஎம், நெட் பேங்கிங் அல்லது கடிதம் மூலம் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஒய்சி விவரங்களில் பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை ஏற்றுக்கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் வங்கி வாடிக்கையாளர்கள் முகவரி மாற்றம் செய்தால் நேரில் சென்று அப்டேட் செய்வதற்கு பதிலாக மின்னஞ்சல் தொலைபேசி நெட்பேங்கிங் மூலமாகவும் அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் இந்த ஆவணங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்க கொள்ளவில்லை என்றால் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version