தமிழ்நாடு

அக்டோபர் 1 முதல் மீண்டும் ஏசி பேருந்துகள்: தமிழக அரசு முடிவு

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தான் நிபந்தனைகளுடன் அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

பேருந்துகளில் 50 சதவிகித பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர், பேருந்தில் பயணம் செய்பவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஏசி பேருந்துகள் இயக்க திட்டமிட்டு உள்ளதாக தமிழக அரசு வட்டாரத்தில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. 60 நகர ஏசி பேருந்துகள் மற்றும் 642 ஏசி புறநகர் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஏசி பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சானிடைசரால் கைகளை சுத்தப்படுத்திய பிறகு தான் ஏசி பேருந்துகளில் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது

தமிழக அரசு ஏசி பேருந்துகளை இயக்க முன்வந்தததற்கு பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version