தமிழ்நாடு

தமிழ்நாட்டில் கருக்கலைப்பு மாத்திரை விற்பனை அதிகரிப்பு; நடவடிக்கை எடுக்குமா அரசு?

Published

on

தமிழ்நாட்டில் சமீபகாலமாகக் கருக்கலைப்பு மாத்திரை விற்பனை அதிகரித்துள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

பெண்கள் தேவையில்லாமல் மகப்பேறு அடைந்தால் அதைக் கருக்கலைப்பு செய்யும் மாத்திரைகள் மூலம் கலைக்க முடியும். தமிழ்நாட்டில் சமீபகாலமாக இந்த மாத்திரை விற்பனை அதிகரித்துள்ளது என்று மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

கருக்கலைப்புச் செய்ய misoprostol மற்றும் mifepristone என்று இருவகையான மருந்துகள் விற்கப்பட்டு வருகின்றன. இந்த மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது பெண்கள் உடல்நலம் பெரிய அளவில் பாதிக்கப்படும்.

எனவே இந்தக் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவர்கள் ஆலோசனை சீட்டு இன்றி விற்க அனுமதி கிடையாது. ஆனாலும் சில மருந்துக் கடைகள் காசுக்கு ஆசைப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக நினைத்துக்கொண்டு விற்று விடுகின்றனர்.

இவற்றைத் தடுக்க மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் தடுக்கப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அன்மையில் 30 மருந்துக் கடைகளில் மருத்துவர் ஆலோசனையின்றிக் கருக்கலைப்பு மாத்திரைகைகள் வழங்கியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறினர்.

அதுமட்டுமில்லாமல் மருத்துவமனைகள் தவிரப் பிற மருதங்களில் இது போன்ற மாத்திரைகள் விற்பனை செய்வதைக் குறைக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version