இந்தியா

பாகிஸ்தான் மேஜரின் கேள்விகளுக்கு துணிந்து பதில் சொல்ல மறுக்கும் அபிநந்தன்!

Published

on

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்.

அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ரத்தக்காயங்களுடன் இருக்கும் அபிநந்தனிடம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கேள்வி கேட்டு அதற்கு அவர் பதில் அளிக்கும் வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது.

அதில் பாகிஸ்தான் மேஜரின் கேள்விகளுக்கு கொஞ்சம் கூட பயமில்லாமல் சகஜமாக பதில் அளிக்கும் அபிநந்தன் சில கேள்விகளுக்கு தைரியமாக பதில் சொல்ல மறுக்கிறார். அந்த உரையாடல் பின்வருமாறு.

கேள்வி: உங்கள் பெயர் என்ன?
பதில்: விங் கம்மாண்டர் அபிநந்தன்.

கேள்வி: நாங்கள் உங்களை நன்றாக நடத்தினோமா?
பதில்: நன்றாக கவனித்தீர்கள், நான் இந்தியா சென்றாலும் இந்த பதிலை மாற்ற மாட்டேன். என்னை பாதுகாப்பாக அழைத்து வந்து உரிய மரியாதை கொடுத்த அனைவருக்கும் நன்றி. எங்களுடைய ராணுவமும் உங்களை இதேப்போன்று மரியாதையோடு நடத்தியிருக்கும் என்றார்.

கேள்வி: நீங்கள் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து வருகிறீர்கள்?
பதில்: இதற்கு பதில் அளிக்க முடியும், தென்னிந்தியாவில் இருந்து வருகிறேன். ஆனால் எந்த இடம் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது.

கேள்வி: உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?
பதில்: ஆமாம், ஆகிவிட்டது.

கேள்வி: நீங்கள் வந்த விமானத்தின் பெயர் என்ன?
பதில்: மன்னிக்கவும் மேஜர், அதை என்னால் சொல்ல முடியாது.

கேள்வி: உங்களுடைய இலக்கு என்ன?
பதில்: மன்னிக்கவும் மேஜர், அதை என்னால் சொல்ல முடியாது.

seithichurul

Trending

Exit mobile version