இந்தியா

வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்படுகிறார் அபிநந்தன்: உச்சக்கட்ட பாதுகாப்பு!

Published

on

பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். அதன்படி இன்று இந்தியாவிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்படுகிறார்.

பாகிஸ்தானில் இருந்து இன்று விடுவிக்கப்படும் விமானப்படை வீரர் அபிநந்தன் ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்படுகிறார். பின்னர் லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்படுகிறார் அபிநந்தன். அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைப்பதால் வாகா எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய விமானி அபிநந்தனுக்கு பாகிஸ்தானில் உடல் பரிசோதனை நடத்தப்பட்டு, அவர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் வாகா எல்லை வழியாக வர உள்ள அபிநந்தனை வரவேற்க பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் வாகா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக மோடியிடம் வாகா செல்ல அம்ரீந்தர் சிங் அனுமதி கோரியிருந்தார்.

பாகிஸ்தானில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் ஒப்படைக்க உள்ளனர். இந்திய விமானப்படையை சேர்ந்த கேப்டன் ஜே.டி.குரியன் அடங்கிய அதிகாரிகள் அபிநந்தனை இந்தியா அழைத்து வர உள்ளனர். வாகா வரும் அபிநந்தனை அமிர்தசரஸ் விமான தளத்தில் இருந்து டெல்லி அழைத்து செல்கின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version