சினிமா

ராக்கி ஷாவந்தின் முதுகு எலும்பை உடைத்த மல்யுத்த வீராங்கனை!

Published

on

பரபரப்பை கிளப்பி புகழை அடைவதையே வழக்கமாக கொண்ட நடிகை ராக்கி ஷாவந்த், தற்போது மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பி பிரேக்கிங் நியூஸில் வந்துள்ளார். இம்முறை அவரது முதுகெலும்பும் பிரேக் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள பஞ்சபுலா என்ற இடத்தில் பெண்கள் மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கவர்ச்சி நடிகை ராக்கி ஷாவந்த் கலந்து கொண்டார்.

மல்யுத்த போட்டியில் ரொபேல் என்ற வீராங்கனை மற்ற மல்யுத்த வீராங்கனைகளை வீழ்த்தி வெற்றி பெற்றார். இறுதியில், என்னை எதிர்க்க யாராவது இருக்கீங்களா என்று வழக்கமாக கேட்பது போன்று கேட்டுள்ளார். இதுதான் சான்ஸ் என எண்ணிய ராக்கி சாவந்த், ரிங்குக்குள் சென்றார். என்னைப் போல நீ நடனமாடினால், நான் உன்னுடன் மல்யுத்தம் செய்கிறேன் என்றார். இருவரும் நடனமாடினர். பின்னர், மல்யுத்தம் தொடங்கியது. ராக்கி சாவந்தை அலேக்காக தூக்கிய ரொபேல் அவரை தரையில் அடித்து துவம்சம் செய்தார். உடனடியாக ராக்கி ஷாவந்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதுகெலும்பு உடைந்த நிலையில் மருத்துவமனையில் ராக்கி சாவந்த் சிகிச்சை பெற்று வருகிறார்.

இருவரது சண்டை யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Trending

Exit mobile version