வணிகம்

ஆவின் எடுத்த அதிரடி முடிவு.. 10 ஆயிரம் பால் கார்டுகள் ரெனிவல் சரிவு!

Published

on

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ஆவின் நிறுவனம் மாதாந்திர பால் கார்டுகள் மூலம் மாநிய விலையில் பால் பாக்கெட்களை விற்பனை செய்து வருகிறது.

ஆவினின் பிரீமியம் பால் பாக்கெட்களை 14 ரூபாய் வரை குறைந்த விலையில் பால் கார்டுகள் மூலம் வாங்க முடியும்.

இந்த ஆவின் கார்டுகள் மூலம் பால் பாக்கெட் வாங்கி அதிக விலைக்கு டீ கடைகள் மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் பலர் விற்று வருவதாக நீண்ட காலமாகப் புகார் எழுந்து வந்தது.

இந்நிலையில் ஆவின் நிறுவனம் பால் கார்டுடன் ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

ஆவின் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் ஆவின் பிரீமியம் பால் கார்டு வாங்குபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரம் வரை சரிந்துள்ளது.

ஆவின் எடுத்த இந்த ஒரு அதிரடி முடிவால் ஒவ்வொரு மாதமும் பல லட்சம் ரூபாய் சேமிப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஆவின் பிரீமியம் பால் பாக்கெட் 500 மிலி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆவின் க்ரீன் மேஜிக் பால் பாக்கெட் 225 மிலி 112 ரூபாய், 500 மிலி 22 ரூபாய், 5 லிட்டர் பாக்கெட் 210 ரூபாய்.

ஆவின் நைஸ் பால் பாக்கெட் 500 மிலி 20 ரூபாய், 1 லிட்டர் 400 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

ஆவின் டையட் பால் 500 மிலி 18.5 ரூபாய் பாக்கெட் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version