தமிழ்நாடு
ஆவின் டிலைட் பால்.. 90 நாட்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.. விலை எவ்வளவு தெரியுமா?
ஆவின் நிறுவனம் டிலைட் என்ற புதிய பால் பாக்கெட்டை அறிமுகம் செய்துள்ளது.
வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு கடலோர மாவட்டங்களில் மழைக்காலம் என்றால் தண்ணீர் பல இடங்களில் தேங்குவதும், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது.
இது போன்ற காலங்களில் 90 நாட்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தக் கூடிய டிலைட் என்ற புதிய பால் பாக்கெட்டை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
முன்பு இயற்கைப் பேரிடர் போன்ற காலங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படும் மக்களுக்குப் பால் பவுடர் போன்றவை வழங்கப்படும். ஆனால் இனி டிலைட் பால் பாக்கெட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிலைட் பால் குளிர்சாதன வசதி ஏதும் இல்லாமல் 90 நாட்கள் வரை சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம்.
ஆவின் டிலைட்டில் 3.5 சதவீகிதக் கொழுப்பு இருக்கும். 0% பாக்டீரியா. வாங்கிய உடன் பாலை சூடாக்கிப் பயன்படுத்தலாம். நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கும் ஏற்றது.
ஆவின் டிலைட் விலை எவ்வளவு?
ஆவின் டிலைட் பால் 500 மிலி பாக்கெட் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.