இந்தியா

‘ஆரோக்கிய சேது’ செயலி கட்டாயம் என்பது சட்ட விரோதமானது.. முன்னாள் நீதிபதி அதிர்ச்சி தகவல்!

Published

on

கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தொழில்நுட்ப உதவியுடன் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மத்திய அரசு ஆரோக்கிய சேது என்ற செயலியை அறிமுகம் செய்தது.

அந்த செயலியை அரசு ஊழியர்கள் அனைவரும் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும், ரயில் பயணம் செய்ய விரும்புபவர்களும் இந்த செயலியை தங்களது மொபைல் போனில் வைத்துக்கொள்வது கட்டாயம் என்று மத்திய அரசு கூறிவருகிறது.

இந்நிலையில், ஆரோக்கிய செயலியை மொபைல் போனில் கட்டாயம் நிறுவ வேண்டும் என்பது சட்ட விரோதமானது என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான பிஎன் ஸ்ரீகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இதுவரை எந்த சட்டமும் ஆரோக்கிய சேது செயலி கட்டாயம் என்று கூறவில்லை. அப்படி இருக்கையில் சட்டம் ஏதுமில்லாமல் ஆரோக்கிய சேது செயலியை கட்டாயம் தங்களது ஸ்மார்ட்போன்களில் நிறுவ வேண்டும் என்று அரசு கூறுவது எந்த வகையில் சரியானது.

உத்திரப் பிரதேச நொய்டா காவல் துறையினர் இந்த செயலியை மொபைல் போனில் நிறுவவில்லை என்றால் சிறைத் தண்டனை அல்லது அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறுவது சட்டப்பூர்வமானது அல்ல. ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் என்றும் ஸ்ரீகிருஷ்ணா கேள்வி எழுப்பியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version