டிவி
பாலா ஆட… அதுக்கு ஆரி ஊத… இது ஸ்கிரிப்டலேயே இல்லாத ட்விஸ்ட் ஆச்சே!
பிக் பாஸ் வீட்டில் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் ஒன்று ஏற்பட்டுள்ளது. எப்போதும் எதிரெதிர் அணியில் இருக்கும் பாலாவும் ஆரியும் ஒன்றிணைந்து வீட்டில் போட்டியாளர்களாக இருக்கும் மற்றவர்களை எதிர்த்துள்ளனர். இது குறித்த வீடியோ அனைத்து பிக் பாஸ் ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதனால் ‘பாலா ஆர்மியும்’ ‘ஆரி ஆர்மியும்’ குதூகலத்தில் உள்ளனர்.
வீடியோவில் பாலா, ‘பொதுவா பிக் பாஸ் வீட்ல என்னையும் ஆரியையும் சுத்திதான் எல்லா விஷயமும் போய்கிட்டு இருக்கு. இந்த டாஸ்க்லேயும் எங்க ரெண்டு பேருக்கு எதிராத்தான் அதிகமா எல்லாரும் பேசியிருக்காங்க. ஆனா, உண்மை என்னனா மத்தவங்கல்லாம் சேஃப் கேம் விளையாடி இருக்காங்க. இதனால நானும் பாதிக்கப்பட்டு இருக்கேன்’ என்று பாலா சொல்ல சொல்ல, ஆரி அனைத்தையும் ஆமோதித்துத் தலையாட்டுகிறார். கடைசியாக, பாலா சொன்ன அத்தனையும் உண்மை என்பதை ஆதரித்து, சல்யூட் அடிக்கிறார் ஆரி. இதனால் பிக் பாஸில் உள்ள மற்ற போட்டியாளர்கள் பயங்கர டென்ஷனாகியுள்ளனர். குறிப்பாக ரம்யா பாண்டியன் மற்றுர் ரியோ, பாலாவின் பேச்சால் படபடத்துப் போயுள்ளனர்.