டிவி

பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் இல்லாத சாதனை… ஆர்ப்பரிக்கும் ஆரி ரசிகர்கள்..!

Published

on

பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே இல்லாத சாதனையாக முதன்முறையாக ஆரி அர்ஜுனன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

பிக்பாஸ் தமிழில் வெளியான நான்கு சீசன்களில் இதுவரையில் இல்லாத  வகையில் அதிக முறை நாமினேட் ஆகி அதிக முறை சேவ் செய்யப்பட்ட போட்டியாளர் என்ற சாதனையை ஆரி செய்துள்ளார். இதுவரையில் அதிகபட்சமாக ஆரி 11 முறை நாமினேட் செய்யப்பட்டு 11 முறையும் சேவ் செய்யப்பட்டு உள்ளார்.

முதல் சீசனில் ஆரவ் 7 முறை நாமினேட் ஆகியுள்ளார். 2-வது சீசனில் பொன்னம்பலம் மற்றும் மும்தாஜ் ஆகிய இருவரும் 7 முறையும் 3-வது சீசனில் கவின் 8 முறையும் அதிகப்பட்சமாக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சமுக வலைதளங்களில் ஆரி ரசிகர்கள் டைட்டிள் வின்னர் ஆரி தான் என்று அடித்துச் சொல்வதாக போஸ்ட் செய்து வருகின்றனர். இதன் மூலம் ஆரி ஆர்மி மிகவும் உற்சாகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version