சினிமா செய்திகள்

2வது மனைவியையும் விவாகரத்து செய்கிறார் அமீர்கான்!

Published

on

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் ஏற்கனவே தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்வதாக அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் பிரபல நடிகை அமீர்கான், ரீனா தத்தா என்பவரை 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்து அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக 2002ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பின்னர் கடந்த 2005ஆம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை திருமணம் செய்த நிலையில் 15 ஆண்டுகள் கழித்து கிரணையும் தற்போது அவர் விவாகரத்து செய்ய உள்ளார். இதுகுறித்து அமீர்கான் மற்றும் கிரண் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நல்ல வாழ்க்கையை வாழ்ந்தோம். எங்கள் உறவு உண்மையாக இருந்தது என்பதும், எங்கள் இருவரிடமும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை, மரியாதை இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க விரும்புகிறோம். இனி நாங்கள் கணவன் மனைவியாக இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் துணையாகவும், எங்கள் மகன் ஆசாத்துக்கு நல்ல பெற்றோராகவும் இருக்க முடிவு செய்துள்ளோம். இதனை சில ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் திட்டமிட்டு இருந்தாலும் இப்பொழுது தான் இதை செயல்படுத்த சரியான நேரம் என்பதை உணர்ந்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம்.

எனினும் நாங்கள் திரைப்படம் மற்றும் பிற விஷயங்களில் ஒன்றாக பணியாற்றுவோம். எங்கள் உறவில் இது ஒரு பரிணாம வளர்ச்சி என்றே நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். இந்த முடிவிற்கு எங்கள் குடும்பத்தார் ஒத்துழைப்பு கொடுத்தது மிகுந்த நன்றி. எங்கள் நலன் விரும்பிகளும் இதனை ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக எடுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளார். அமீர்கான் மற்றும் கிரண் வெளியிட்டு இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version