இந்தியா

பஞ்சாப் மாநிலத்தையும் கைப்பற்றுகிறதா ஆம் ஆத்மி? கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Published

on

உத்தர பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்பட ஒருசில மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறும் கட்சி எது என்பது குறித்த சர்வே முடிவுகள் தற்போது எழுந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பே இல்லை என்றும் அந்த கட்சிக்கு 40 முதல் 45 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் சர்வே தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சிக்கு 47 முதல் 52 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் அகாலி தளம் கட்சிக்கு 22 முதல் 26 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழகம் போலவே பாஜகவுக்கு ஒன்று அல்லது இரண்டு இடங்களை மட்டுமே பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்திற்கு புதிய முதல்வர் தேவை என்றும் ஏற்கனவே முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் மற்றும் தற்போது முதல்வராக இருக்கும் சரண்ஜித் சிங் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. அதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் முதலமைச்சராகும் வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் என்றும் அக்கட்சியில் இருந்து ஒருவர் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

கோவா மாநிலத்தில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலத்தின் கருத்துக்கணிப்புகள் இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version