இந்தியா

தேசிய கட்சியாக உருவெடுக்கும் ஆம் ஆத்மி: 2024ல் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் வேட்பாளரா?

Published

on

இந்தியாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே தேசிய கட்சிகளாக இருக்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சியும் தேசிய கட்சியாக உருவெடுத்து வருவதாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் காங்கிரஸ் தற்போது இரண்டு மாநிலங்களில் மட்டும் தான் ஆட்சியில் உள்ளது என்பதும் அதேபோல் ஆம் ஆத்மி கட்சியும் இரண்டு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து விட்டதால் தேசிய கட்சியாக உருவெடுத்து விட்டது என்றும் கூறப்படுகிறது.

மேலும் 5 மாநில தேர்தலில் உத்தரகாண்ட் கோவா ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியை ஓரளவுக்கு நல்ல வாக்குகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தென் மாநிலங்களிலும் அக்கட்சி கவனத்தை செலுத்தினால் அல்லது தென் மாநிலங்களில் இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் இன்னும் 10 வருடங்களில் அக்கட்சி தேசிய கட்சியாக உருவெடுத்து விடும் என்று கூறப்படுகிறது.

எனவே வரும் 2024 ஆம் ஆண்டு வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதமர் வேட்பாளராக அறிவித்து, பாஜகவுக்கு எதிராக ஒரு இமாலய கூட்டணியை உருவாக்கினால் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version