இந்தியா

புதுடில்லியில் ஆம் ஆத்மி அரசின் தமிழ் அகாடமி!

Published

on

டெல்லியில் ஆம் ஆத்மி அரசு சார்பில் பிரத்யேக தமிழ் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் வகையில் தனியார் மற்றும் அரசு சார்பில் பல தரப்பட்ட அமைப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது டெல்லி அரசு சார்பில் தமிழுக்கான அகாடமி நிறுவப்பட்டுள்ளது.

இந்த அகாடமியை டெல்லி  மாநில துணை முதல்வரும், கலை, கலாசாரம் மற்றும் மொழித் துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா தொடங்கி வைத்தார். அகாடமியின் துணை தலைவராக முன்னாள் மாநகராட்சி கவுன்சிலரும், டில்லி தமிழ் சங்கத்தின் உறுப்பினருமான என்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் அகாடமிக்கான கட்டுமான பணிகள் விரைவில் துவங்க உள்ளதாகவும், அகாடமி மூலமாக தமிழகத்தின் கலை மற்றும் கலாசாரத்தைப் பற்றி பலத்தரப்பு மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்றும் நிறுவனர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

டெல்லி அரசு சார்பில் தமிழுக்கான அகாடமி நிறுவப்பட்டிருப்பது உலகத்தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Trending

Exit mobile version