தமிழ்நாடு

ஆடி அமாவாசை: முக்கிய தலங்களில் தர்ப்பணம், புனித நீராடல்களுக்குத் தடை!

Published

on

ஆடி அமாவாசை அன்று பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க, கோயில் குளங்களில் புனித நீராட பல முக்கிய தலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசை ஞாயிற்றுக்கிழமை (இன்று) கொண்டாடப்படுகிறது. ஆடி அமாவாசை அன்று பலரும் திதி, தர்ப்பணம் கொடுத்தல், கோயில் குளங்கள் அல்லது புனித தலங்களில், கடல் பகுதிகளில், ஆற்றங்கரைகளில் நீராட, பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மூன்றாம் அலையாக உருவெடுப்பதைத் தடுக்கும் பொறுட்டு தமிழ்நாட்டில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

திருவிழாக்காலம் என்பதால் பொதுமக்கள் அதிகளவில் கூடும் கோயில்களில் பக்தர்களுக்கு பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. முக்கிய தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோயில்கள் திறந்து இருக்காது. இதனால், ஞாயிற்றுக்கிழமையில் வரும் ஆடி அமாவாசைக்கு கோயில்களுக்குச் செல்ல முடியாது.

இதேபோல் முக்கிய ஆற்றங்கரைகள், ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற கடல் கரைகளில் தர்ப்பணம், திதி கொடுக்கவும் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் உள்ள அத்தனை கோயில்களுக்கும் பொருந்தும். தனித்தனியே மாவட்ட வாரியகாவும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் சிறப்பு உத்தரவுகளையும் ஆடி அமாவாசையை முன்னிட்டுப் பிறப்பித்துள்ளார்கள்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version