ஆன்மீகம்

ஆடி அமாவாசையில் முன்னோர்களை வழிபடும் சிறந்த நேரம் மற்றும் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் செய்ய வேண்டியவை!

Published

on

ஆடி அமாவாசை 2024: ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தால், புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும். ஆனால், ஆடி, தை, புரட்டாசி ஆகிய மூன்று மாதங்களில் வரும் அமாவாசை தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தால், புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆடி அமாவாசை என்றால் என்ன?

ஆடி அமாவாசை என்பது பித்ரு தோஷத்தை போக்கும் சிறந்த நாளாக கருதப்படுகிறது. திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப காரியங்களும், முன்னோர்களின் ஆசியோடு தடையின்றி நடைபெறும் என்பது ஐதீகம்.

ஆடி அமாவாசையின் சிறப்பு

ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து பூலோகத்திற்கு வரும் நாள். தட்சிணாயன புண்ணிய காலத்தின் முதல் அமாவாசை என்பதால், ஆடி அமாவாசை மிகவும் பிரசித்திப் பெற்ற நாளாகக் கருதப்படுகிறது.

ஆடி அமாவாசை திதி, தர்பணத்தின் சிறப்பு

ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தால், அது நம் முன்னோர்களுக்கு சென்றடையும் என்பது ஐதீகம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது, அவர்களுக்கு மோட்சம் கிடைப்பதற்கும், நமக்கு பல நன்மைகள் பெறுவதற்கும் உதவுகிறது என்பது நம்பிக்கை.

2024 ஆடி அமாவாசை எப்போது மற்றும் திதி கொடுக்க உகந்த நேரம் என்ன?

2024ஆம் ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் 4ஆம் தேதி (ஆடி 19) ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை 4:56 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 4ஆம் தேதி மாலை 5:32 மணிவரை அமாவாசை திதி இருக்கும்.

தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம்

ஆடி அமாவாசை நாளில் காலை 6:00 மணி முதல் 11:55 மணி வரை தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபடுவது சிறந்த நேரமாகும். இந்த ஆண்டு, ஆடி அமாவாசை ஞாயிற்றுக்கிழமை அன்று வருவதால், பகல் 12:00 மணி முதல் 1:30 மணி வரை எமகண்ட நேரம் என்பதால், அந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். உரிய நேரத்தில் தர்ப்பணம் கொடுத்தால் சிறப்பு.

தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் செய்ய வேண்டியது

ஆடி அமாவாசை நாளில் நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஒருவேளை, தர்ப்பணம் கொடுக்க முடியவில்லை என்றால், ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கலாம். இது பித்ரு தோஷம் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மேலும், அந்த நாளில் காகத்திற்கு உணவு வழங்கினால், முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

Poovizhi

Trending

Exit mobile version