இந்தியா

ஆதார்-பான் இணைக்க அவகாசம் நீட்டிப்பு: எத்தனை மாதங்கள் தெரியுமா?

Published

on

ஆதார் மற்றும் பான் கார்டை அனைவரும் இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைப்பதற்கு மார்ச் 31ம் தேதி தான் கடைசி தேதி என்றும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதனையடுத்து இன்று கடைசி தேதி என்பதால் ஆன்லைன் மூலம் ஆதார் கார்டையும் பான் கார்டையும் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான இணைக்க குவிந்ததால் அந்த இணையதளம் ஸ்தம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்றுக்குள் ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணை இணைக்காவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டதால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் ஜூன் 30 வரை காத்திருக்காமல் விரைவில் அனைவரும் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.e 30

seithichurul

Trending

Exit mobile version