இந்தியா

குப்பைக்குள் மூட்டை மூட்டையாக ஆதார் – பான் அட்டைகள்: அதிர்ச்சி தகவல்

Published

on

குப்பைக்குள் மூட்டை மூட்டையாக ஆதார் அட்டைகள் மற்றும் பான் கார்டுகள் இருந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் மாவட்டம் கொப்பல் மாவட்டம் கன்னகிரி என்ற பகுதியிலுள்ள குப்பைத் தொட்டியில் மூட்டை மூட்டையாக ஆதார் அட்டைகள் மற்றும் பான் கார்டுகள் இருந்ததால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து இது குறித்து காவல்துறையில் அந்த பகுதி மக்கள் புகார் அளித்த நிலையில் காவல்துறை விரைந்து வந்து அந்த மூட்டைகளை கைப்பற்றி விசாரணை செய்தது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கன்னகிரி பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் இருந்துதான் இந்த குப்பைகள் கொட்டப்பட்டு இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக உள்ள தபால் ஊழியர்கள் எந்தக் கடிதத்தையும் டெலிவரி செய்யாமல் சேர்த்து வைத்து அதன் பிறகு அதை மூட்டையாக கட்டி குப்பை தொட்டியில் கொட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள 5 கிராம மக்களிடம் விசாரித்த போது தாங்கள் ஆதார் மற்றும் பான் அட்டைக்கு விண்ணப்பித்து இருந்ததாகவும், ஆனால் தங்களுக்கு எநெத அட்டையும் வரவில்லை என்றும் கூறினார்கள்.

இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதை அடுத்து தபால் துறை அலுவலர்களிடம் விசாரணை செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version