இந்தியா
ஆதாரில் முகவரியை மாற்றினால் மற்ற ஆவணங்களிலும் தானாக மாறிவிடும்: புதிய வசதி அறிமுகம்!
ஆதாரில் முகவரியை மாற்றினால் பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அனைத்திலும் தானாகவே முகவரி மாற்றப்படும் புதிய வசதி அறிமுகம் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டையில் முகவரியை மாற்றும் போது அந்த பயனாளர் டிஜிலாக்கர் என்ற வசதியை பெற்றிருந்தால் அதில் அவர் பதிவு செய்திருக்கும் அனைத்து ஆவணங்களிலும் முகவரி மாற்றம் தானாகவே செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
டிஜிலாக்கர் என்ற வசதியை பயன்படுத்தி ஒருவர் தன்னுடைய வாகன பதிவு ஆவணங்கள், காப்பீடு அட்டை, பல்கலைக்கழகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சான்றிதழ்கள் மற்றும் மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றை சேமித்து கொள்ளலாம். ஒரு டிஜிலாக்கர் கோப்பின் அளவு 10 ஜிபி என இருக்கும்.
இந்த டிஜி லாக்கர் வசதியை பெற்றவர்கள் ஆதார் அட்டையில் மட்டும் முகவரியை மாற்றினால் போதுமானது, ஒவ்வொரு ஆவணத்திற்கும் அந்தந்த அலுவலகத்திற்கு சென்று முகவரியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்த டிஜி லாக்கர் வசதி பெற்றவர்கள் ஆதார் அட்டையில் முகவரி மாற்றினால் தானாகவே அவருடைய டிஜிலாக்கரில் உள்ள அனைத்து ஆவணங்களிலும் முகவரி மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.