இந்தியா

ஆதார் கைரேகை சரிபார்ப்பில் AI டெக்னாலஜி.. இனி முறைகேடு செய்யவே முடியாதா?

Published

on

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது அவசியம் என்பதும் ஆதார் அட்டை கிட்டத்தட்ட அனைத்து முக்கிய ஆவணங்களிலும் இணைக்கப்பட்டுள்ளதால் ஆதார் அட்டை இல்லாமல் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக வங்கியில் கணக்கு ஓபன் செய்ய வேண்டும் என்றாலும்,, ரேஷன் கார்டு அப்ளை செய்ய வேண்டும் என்றாலும் லோன் வாங்க வேண்டும் என்றாலும் ஆதார் அட்டை என்பது அத்தியாவசியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒவ்வொரு குடிமக்களுக்கும் அத்தியாவசிய தேவையாக இருக்கும் இந்த ஆதார் அட்டையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவ்வப்போது UIDAI என்று கூறப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது மேலும் ஒரு கூடுதல் வசதியாக ஆதார் அட்டை கைரேகை சரிபார்ப்பில் AI டெக்னாலஜி மற்றும் மிஷின் லேர்னிங் என்ற டெக்னாலஜி ஆகியவற்றை புகுத்த UIDAI திட்டமிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு என்று சொல்லப்படும் AI மற்றும் இயந்திர கற்றல் என்று சொல்லப்படும் மெஷின் லேர்னிங் ஆகிய இரண்டு டெக்னாலஜி மூலம் கைரேகை பாதுகாப்பை அதிகப்படுத்த UIDAI முடிவு செய்தது. இதன் காரணமாக இந்த புதிய பாதுகாப்பு முறை ஆதார் அங்கீகார பரிவர்த்தனைகளை இன்னும் பாதுகாப்பாkகும் என்றும் வலுவானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த புதிய டெக்னாலஜி அறிமுகம் செய்யப்பட்டவுடன் ஏமாற்றும் முயற்சிகள் குறையும் என்றும் ஆதார் அட்டையின் மூலம் எந்த ஒரு முறைகேடுகளையும் செய்ய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி மற்றும் நிதியியல், தொலைத்தொடர்பு மற்றும் அரசுத் துறைகள் போன்ற பிரிவுகளில் பெரும் பயன் மிக்கதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆதார் உடன் இணைக்கப்பட்ட கட்டண முறையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்றும் முறைகேடுக்கு எந்தவிதமான வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய கைரேகை பாதுகாப்பு அம்சம் தற்போது முழுமையாக செயல்பட்டு உள்ளது என்றும் பல ஏஜென்சிகள் மற்றும் ஆய்வாளர்களிடம் இது குறித்து ஆய்வு செய்த பின்னரே இந்த புதிய வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version