வணிகம்

ஆதார்-வங்கி கணக்கு இணைப்பு.. மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய நிர்மலா சீதாராமன்!

Published

on

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021, மார்ச் 31-ம் தேதிக்குள் அனைத்து வங்கி கணக்குகளும் ஆதார் எண்ணுடன் இனைக்கப்பட்டதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்பது சர்ச்சையாகியுள்ளது.

2018-ம் ஆண்டு ஆதார் இணைப்பு குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய தீர்ப்பில், வருமான வரி தாக்கல் செய்ய பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம், ஆனால் வங்கி கணக்குகளுடன் ஆதார் இணைக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என தெரிவித்து இருந்தது.

ஆனால் செவ்வாய்க்கிழமை நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், “2021, மார்ச் 31-ம் தேதிக்குள் அனைத்து வங்கி கணக்குகளும் ஆதார் எண்ணுடன் இனைக்கப்பட்டதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும், டிஜிட்டல் அல்லாத பரிவர்த்தனைகளை வங்கிகள் குறைத்துகொள்ள வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version