சினிமா
ஆடை இல்லாமல் இருக்கும் அமலா பால்: ஷாக் கொடுத்த டீசர்!
நடிகை அமலா பால் தொடர்ந்து சில படங்களில் நாயகிக்கு முக்கியத்துவமான கதைகளை தேர்வு செய்து லீடு ரோலில் நடித்து வருகிறார். அதில் ஒன்றான ஆடை படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. அதில் நடிகை அமலா பால் ஆடை இல்லாமல் தோன்றி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
மேயாத மான் படத்தை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் டீசர் இன்று வெளியானது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அமலாபால் கிழிந்த ஆடையுடன் உடலின் பல பாகங்கள் தெரியும்படி ஏற்கனவே தோன்றியிருந்தார்.
இந்த போஸ்டர் வைரல் ஆனது மட்டுமின்றி இந்த போஸ்டருக்கு எதிராக சர்ச்சைகளும் கிளம்பின. இதனால் டீசர் இன்னும் சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று வெளியான டீசரில் அமலா பால் ஆடை இல்லாமல் இருப்பது பலருக்கும் ஷாக்காக உள்ளது. மேலும் இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.