சினிமா செய்திகள்
ஆடை படக்குழுவின் அடுத்த ட்ரீட்டுக்கு ரெடியா?
ஆடை படத்தின் துவக்கத்தில் வரும் நங்கெலி பற்றிய கதை குறித்த தனி டாக்குமெண்ட்ரி படம் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என ஆடை படக்குழு மற்றும் அமலாபால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மார்பை மறைக்க சேலை அணியக்கூடாது என்ற திரைச்சீலை சட்டத்தை எதிர்த்தும், அதற்காக விதிக்கப்பட்ட முலை வரியை எதிர்த்தும் நங்கெலி என்ற பெண் தனது மார்பகங்களை அறுத்து முலை வரி செலுத்தி புதிய புரட்சி செய்து, பெண்கள் குலம் மார்பை மறைக்க சீலை அணியும் வரலாற்றை உருவாக்கிய நங்கெலி குறித்த அனிமேஷன் டாக்குமெண்ட்ரியை ஆடை பட இயக்குநர் ரத்னகுமார் உருவாக்கியுள்ளார்.
ஆடை படத்தின் வெற்றியை தொடர்ந்து நங்கெலியின் அனிமேஷன் டாக்குமெண்ட்ரி இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.