உலகம்

மக்கள் மீது சுட்ட இலங்கை அமைச்சரின் பாதுகாவலர்கள்.. ஒருவர் பலி.. பரபரப்பு!

Published

on

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் அந்நாட்டு அமைச்சர் அர்ஜுனா ரணதுங்காவின் பாதுகாவலர்கள் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியாகி உள்ளார்.

அர்ஜுனா ரணதுங்கா பெட்ரோலிய துறை அமைச்சராக உள்ளார். நேற்று மாலை அர்ஜுனா ரணதுங்கா கொழும்பின் டிமாடகோடாவில் உள்ள சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சில ஆவணங்களை எடுக்க அவரது பாதுகாலவர்களுடன் சென்றுள்ளார்.

ஆனால் அங்கிருந்து பணியாளர்கள் அமைச்சருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். அமைச்சரின் பாதுகாவலர்கள் திடீரென துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். அங்கு இருந்த மக்களை நோக்கி நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மக்கள் வேகமாக வேறு திசையில் ஓடினார்கள்.

இந்த துப்பாக்கி சூடு காரணமாக ஒருவர் பலியாகி உள்ளனர். மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் அந்த பெட்ரோலிய நிறுவன ஊழியர் பலியானார். இதில் 2 பேர் காயமடைந்தனர்.

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version