தமிழ்நாடு

எச் ராஜாவுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு!

Published

on

பாஜக பிரமுகரும், முன்னாள் பாஜக பொதுச் செயலாளருமான எச் ராஜாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம் 20ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கூட்டமொன்றில் பேசிய எச் ராஜா அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த அவதூறு வழக்கில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றைய விசாரணையின்போது நீதிமன்றத்தில் எச் ராஜா ஆஜராகாததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு உள்பட எச் ராஜா மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை நீதிமன்றங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version