தமிழ்நாடு

சீட் கொடுக்காததால் ஆத்திரம்: திமுக எதிர்த்து குடும்பமே போட்டி!

Published

on

தஞ்சை திமுக பிரமுகர் ஒருவருக்கு சீட் கொடுக்காததால் அவருடைய குடும்பத்தினர் அனைவருமே திமுகவுக்கு எதிராக தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன என்பதும் குறிப்பாக திமுக ஏழு கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட திமுகவை சேர்ந்த செல்வகுமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு போட்டியிட திமுக மேலிடம் வாய்ப்பு தரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார் தனது தாய் தந்தையுடன் திமுகவுக்கு எதிராக 3 வார்டுகளில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். 32 வது வார்டில் செல்வகுமாரும் 33 வது வார்டில் அவரது மனைவி வனிதாவும் 34வது வாrடில் மகன் சக்கரவர்த்தியும் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர்.

தஞ்சை மாநகராட்சி தேர்தலில் திமுகவில் சீட் கிடைக்காததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகிய மூன்று பேர்களும் 3 வார்டுகளில் சுயேச்சையாக போட்டி இடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version