இந்தியா

முதலமைச்சருக்கு கோவில் கட்டிய எம்.எல்.ஏ: வைரல் புகைப்படங்கள்

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி அவர்களுக்கு பாஜக தொண்டர் ஒருவர் கோவில் கட்டினார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது முதல் அமைச்சர் ஒருவருக்கு எம்எல்ஏ ஒருவர் கோயில் கட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் கோயில் கட்டியுள்ளார். இந்த கோவிலின் மதிப்பு 2 கோடி என்று கூறப்படுகிறது. சித்தூர் மாவட்டம் காளகஸ்தியில் கட்டப்பட்ட இந்த கோவில் கட்டுமானத்தில் பின்னணியில் ஆந்திர அரசின் நலத்திட்டங்களை காட்சிப் படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்த கோவிலை கட்டிய எம்எல்ஏ மதுசூதனன் கூறியபோது ’ஜெகன்மோகன் ரெட்டி இந்தியாவின் மிகச்சிறந்த முதல்வர்களில் ஒருவர் என்றும் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்த அவர் பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார் என்றும் அந்தத் திட்டங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது என்றும் இந்த கோவிலை சுற்றியுள்ள சுவர்களில் ஆந்திர அரசின் சிறப்பான திட்டங்கள் குறித்த விவரங்கள் முழு அளவில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கோவிலை கட்டி முடிக்க ரூபாய் 2 கோடி செலவானது என்று கூறியுள்ள அவர் ஜெகன்மோகன் ரெட்டியின் உருவப்படங்கள் பொன் மற்றும் வெள்ளியால் அமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த கோவிலில் ஒன்பது தூண்கள் இருப்பதாகவும் ஒவ்வொன்றும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிமுகப்படுத்திய திட்டங்களை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த கட்டிட நிபுணர்கள் இந்த கோவிலை கட்டியதாக அவர் தெரிவித்துள்ளதோடு இந்த கோவில் குறித்த புகைப்படங்களை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்/ இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. இந்த கோவிலுக்கு பலர் பாராட்டு தெரிவித்து இருந்தாலும் ஒரு சிலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version