சினிமா செய்திகள்

விஜய்யின் தளபதி 63 படத்தை இயக்கி வரும் அட்லி மீது துணை நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Published

on

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வரும் படம் தளபதி 63.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சென்னை ஈவிபி பூங்காவில் பிரம்மாண்ட கால்பந்தாட்ட மைதான செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் பணிகள் படு பிசியாக நடந்து வருகின்றன. இந்நிலையில் அட்லி மீது தளபதி 63 படத்தில் நடித்து வரும் துணை நடிகை கிருஷ்ண தேவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகார் மனுவில், ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் அட்லியின் திரைப்படத்தில் பணிபுரிய வந்தேன். வேலை செய்து கொண்டிருக்கும் போது, அட்லியும் அவரது உதவியாளர்களும் என்னை தகாத வார்த்தைகளில் பேசி வேலை செய்ய விடாமல் வெளியே அனுப்பி விட்டார்கள். எனவே அட்லி மற்றும் அவரது உதவியாளர்களை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவரது குற்றச்சாட்டுக்கு இயக்குநர் அட்லி தரப்பில் இருந்தோ அல்லது நடிகர் விஜய் தரப்பில் இருந்தோ இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

author avatar
seithichurul

Trending

Exit mobile version