தமிழ்நாடு

உங்கள் பகுதியில் திடீர் மின்சாரத் தடையா? உடனே இதைச் செய்யுங்கள் போதும்!

Published

on

கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், மக்கள் அதிகளவில் மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தமிழ்நாட்டில் மின்தேவை அதிகரித்துள்ளது. மின்சாரம் இல்லையெனில், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவது உறுதியென்ற நிலையில், அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறது.

மின்தடை

தமிழ்நாட்டில் மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படுகிறது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், நேற்று சென்னையில் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. அதிலும் முக்கியமாக அசோக் நகர் மற்றும் ஜாபர்கான்பேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் 2 முதல் 3 மணி நேரம் வரை இரவு நேரத்தில் மின்சாரம் தடைபட்டது.

பல இடங்களில் இரவு 10 மணிக்கு தடைபட்ட மின்சாரம், நள்ளிரவு 1 மணிக்குத் தான் வந்தது. இந்த மின்சாரத் தடையால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். இதுபோன்ற மின்சாரத் தடைகள் ஏற்பட்டால், பின்வரும் செயல்களை நீங்கள் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

செய்ய வேண்டியவை

  • உங்கள் பகுதிக்கான மின்சார அலுவலக எண்ணை கூகுளில் இருந்து எடுத்து, உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.
  • 9498794987 என்ற மின்னகத்தின் இலவச போன் நம்பரைத் தொடர்பு கொள்ளலாம்.
  • இந்த எண்ணிற்கு நீங்கள் போன் செய்து, சில நிமிடங்கள் காத்திருந்தால் போதும். உடனே புகார் அளிக்கலாம்.
  • மின்தடை குறித்த புகார் அளிக்கும் போது, நீங்கள் வசிக்கும் பகுதி, தெரு, மின்சார இணைப்பு எண் போன்றவை மிக முக்கியமாகும்.
  • இல்லையெனில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமான https://twitter.com/TANGEDCO_Offcl பக்கத்தில் நீங்கள் உங்களது புகார்களை கொடுக்கலாம்.

மேற்கண்ட செயல்களை செய்வதன் மூலம் உடனடித் தீர்வு கிடைக்கும் என தமிழ்நாடு மின்துறை தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version