இந்தியா

ஜமால் மரணம்.. கொலை செய்ய உதவிய ஒரு ஸ்கைப் கால்!

Published

on

இஸ்தான்புல்: பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலையை பின்புறத்தில் இருந்து இயக்கிய மாஸ்டர் மைண்ட் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஸ்கைப் கால் மூலம் இந்த மொத்த கொலையும் அரங்கேறி இருப்பது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சவுதி நாட்டு அரசாங்கம் இந்த கொலையை செய்ததை ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு இடது கையாக செயல்படும் சாத் அல் கவ்தானி என்று நபர்தான் இந்த கொலையை முன்னின்று நடத்தியது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாத் அல் கவ்தானி, சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மானின் சமூக வலைதள பக்கத்தை இவர்தான் கவனித்து வருகிறார். ஜமாலின் கொலையை அரங்கேற்றியது இவர்தான் என்று கூறப்படுகிறது.

ஜமால் கொலை செய்யப்பட போது, சாத் அல் கவ்தானி ஒரு ஸ்கைப் கால் மூலம்தான் சவுதியில் இருந்து கொண்டே இந்த மொத்த திட்டத்தையும் இவர் வழிநடத்தி இருக்கிறார். ஸ்கைப் கால் மூலம் எப்படி கொலை செய்ய வேண்டும், உடலை என்ன செய்ய வேண்டும் என்று எல்லோரையும் வழி நடத்தி உள்ளார்.

 

 

seithichurul

Trending

Exit mobile version