இந்தியா

இந்தியாவுக்கென பிரத்யேக கிரிப்டோ கரன்ஸி: மத்திய நிதியமைச்சர் தகவல்!

Published

on

உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி குறித்த செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவுக்கு என பிரத்யேக கிரிப்டோகரன்சி உருவாக்கப்படும் என இன்றைய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார் .

பிட்காயின் உள்பட பல கிரிப்டோகரன்சி உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பதும், அதில் இந்தியர்கள் உட்பட ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அரசு மற்ற நாட்டின் கிரிப்டோகரன்சிகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் தற்போது இந்தியாவுக்கு என்ன பிரத்யேகமான கிரிப்டோகரன்சி உருவாக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு என பிரத்யேக கிரிப்டோகரன்சி இந்த ஆண்டே உருவாக்கப்படும் என்றும் இந்த ஆண்டு ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் பணம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் பணத்திற்கு என்று புதிய மத்திய வங்கி ஏற்படுத்தப்படும் என்றும் இந்த வங்கி 25 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி மையங்களாக அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் பணம் முறை அறிமுகப்படுத்தப்படும் என்பதும் இந்தியாவுக்கு பிரதியாக கிரிப்டோகரன்சி உருவாக்கப்படும் என்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாக பார்க்கப்படுகிறது.

 

 

seithichurul

Trending

Exit mobile version