தமிழ்நாடு

அமமுக தலைமையில் தனி அணி: பாஜக இணைகிறதா?

Published

on

அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்திருப்பதாக கூறப்பட்டாலும் இன்னும் தொகுதி உடன்பாடு குறித்து முடிவு ஏற்படவில்லை என்பதால் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக பிரியவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திமுகவை தோற்கடிக்க அமமுக தலைமையில் தனி அணி அமைக்கப்படும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். தங்களது அணியில் இணைவதற்கு ஒருசில அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாஜக உடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் பதிலளிக்க மறுத்துவிட்டார். ஆயினும் அவர் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே அதிமுக மற்றும் பாஜக உடனான தொகுதி உடன்பாடு பிரச்சனை ஏற்பட்டால் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி டிடிவி தினகரன் தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் திமுக கூட்டணியில் அதிருப்தி அடையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட ஒரு சில கட்சிகளும், அதிமுக கூட்டணியில் அதிருப்தி அடையும் தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளும் அமமுக தலைமையிலான கூட்டணியில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கமல் தலைமையில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில் டிடிவி தினகரன் தலைமையில் ஒரு கூட்டணி அமைக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version