தமிழ்நாடு

இன்று நீட் தேர்வு, நாளை சட்டமன்றத்தில் தீர்மானம்!

Published

on

இன்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நாளை நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவோம் என்றும் தமிழக மாணவர்களுக்கு நீட் இல்லாத நிலையை உருவாக்குவோம் என்றும் திமுக தேர்தலுக்கு முன்னர் இருந்தே வாக்குறுதி கொடுத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தவுடன் ஏகே ராஜன் தலைமையிலான குழு ஒன்றை அமைத்து நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை பெற்றது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் நீட்தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு பெறுவது குறித்த ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நீட் தேர்வு இந்த ஆண்டு உறுதி என்றும் மாணவர்கள் நீட் தேர்விற்கு தயார் ஆகி வர வேண்டும் என்று ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று நீட் தேர்வு நடைபெற உள்ளது என்பதும் தமிழக மாணவர்களும் நீட் தேர்வு எழுத உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சி வந்தவுடன் எப்படியாவது நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று கொடுத்துவிடும் என்று நம்பிக்கையில் இருந்த மாணவர்கள் ஏமாற்றத்துடன் இன்று நீட் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நாளை சட்டமன்றத்தில் நீட்தேர்வை எதிர்த்துத் தீர்மானம் இயற்றப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முடிந்த பின்னர் தீர்மானம் இயற்றுவதால் என்ன பயன்? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.

 

Trending

Exit mobile version