தமிழ்நாடு

“நீ முதல்ல முருகன் கோயில்ல தமிழ்ல வழிபாடு நடத்துயா..!”- எடப்பாடிக்கு ஆ.ராசாவின் நேரடி சவால்

Published

on

தமிழகத்தில் இருக்கும் அனைத்து முருகன் கோயில்களிலும் சமஸ்கிரதத்திற்கு பதிலாக தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, நேரடியாக சவால் விட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருத்தணியில் கட்சி சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ‘மக்கள் கிராம சபைக் கூட்டத்தில்’ பங்கேற்றார். அப்போது திமுகவினர் அவருக்கு கொடுத்த ஓர் வேல் கம்பை வாங்கி உயர்த்திப் பிடித்தார். தன்னை பகுத்தறிவாளனாக காட்டிக் கொள்ளும் ஸ்டாலின், இப்படி கடவுள் முருகனின் வேலை தூக்குவது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. ஸ்டாலின் வேல் கம்பை உயர்த்திப் பிடித்தது குறித்தான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. அதே நேரத்தில் திமுக தரப்பு, ‘தொண்டர்கள், விருப்பத்துடன் கொடுக்கும் ஒரு விஷயத்தை வாங்கிக் கொள்வதே நல்ல தலைவனுக்கு அழகு. அதைத் தான் ஸ்டாலினும் செய்தார். அதில் எந்த தவறும் இல்லை’ என்று கூறுகிறது.

இந்த விவகாரம் குறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள், ஸ்டாலினை விமர்சித்து கருத்து சொல்லி வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, ராசா சவால் விட்டுள்ளார்.

‘தமிழகத்தில் இருக்கும் அனைத்து முருகன் கோயில்களிலும் சமஸ்கிரதத்தில் ஓதுவதை விட்டுவிட்டு, தமிழில் ஓத வேண்டும். தமிழில் கந்த சஷ்டி படிக்க வேண்டும். அப்படிச் செய்தால், நான் முருகனின் வேல் கம்பைக் கையில் ஏந்திக் கொண்டு, அலகு குத்தி, அரை நிர்வானமாக முருகன் கோயிலுக்கு வருகிறேன்.

நாங்கள் என்னவோ முருகனுக்கு எதிரி போலவும், அதற்கு எதிராக செயல்படுவது போலவும் ஒரு தோற்றத்தைத் அதிமுக அரசு சித்தரிக்கப் பார்க்கிறது. நீங்கள் தானே, பக்தி, தமிழ்க் கடவுள் முருகன் என்கிறீர்கள். அப்படியென்றால், தமிழ்க் கடவுளான முருகனுக்குத் தமிழில் வழிபாடு செய்ய வேண்டும்’ என்று சவால் விடும் தொனியில் பேசியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version