இந்தியா

நிர்மலா சீதாராமனுக்கு திருக்குறள் மூலம் பாடம் நடத்திய ஆ.ராசா!

Published

on

மக்களவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய நீலகிரி தொகுதி திமுக எம்பி ஆ.ராசா வரி விதிப்பு குறித்து நிதியமைச்சர் நிர்மலா நீதாராமனுக்கு திருக்குறள் ஒன்றை கூறி பாடம் நடத்தினார்.

மக்களவையில் நேற்று பேசிய ஆ.ராசா, திராவிட பள்ளியின் மாணவன் என்ற முறையில் இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பாண்டிய மன்னனுக்கு புறநானூற்றில் பிசிராந்தையார் கொடுத்த அறிவுரை பற்றி நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார். வரி எவ்வாறு வசூலிக்கப்பட வேண்டும் என்பதை மட்டுமே பிசிராந்தையார் அறிவுறுத்துகிறார். ஆனால் வரி எங்கிருந்து வசூலிக்கப்பட வேண்டுமென்பதே நமது கவலை.

யாரிடம் வரி வசூலிக்க வேண்டும், யாருக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்கும் புறநானூற்றின் வரிகளுக்கும் தொடர்பில்லை. நிதியமைச்சரின் பிழையை திருத்தி திருக்குறளிலிருந்து சரியான வரிகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இயற்றலும் ஈற்றலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு என்கிறார் திருவள்ளுவர்.

முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அராசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுகாத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும். அந்த அடிப்படையில் இந்த பட்ஜெட் படுதோல்வி அடைந்துள்ளது என குறிப்பிட்டார்.

seithichurul

Trending

Exit mobile version