தமிழ்நாடு

சி.விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் வீடுகளில் ரெய்டு: சுற்றி வளைக்கப்படும் அதிமுக

Published

on

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் போலீசார் சோதனை செய்த நிலையில் இன்று அவருடைய உதவியாளர் 2 பேர் வீடுகளில் திடீரென சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது என்பதுm, வருமானத்துக்கு அதிகமாக ரூ 27 கோடி வரை அவர் சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜயபாஸ்கர் தன்னுடைய வீட்டில் இருந்து பணம் நகை எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று பேட்டி அளித்து இருந்தார் என்றாலும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீட்டிலிருந்து கிலோ கணக்கில் நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

மேலும் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்துக்கள் வாங்குவது எப்படி என்ற பெயரில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் சரவணன் மற்றும் முருகன் ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

சென்னை நந்தனம் மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்பட மொத்தம் நான்கு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சேலத்தில் உள்ள விஜயபாஸ்கருக்கு மிகவும் நெருக்கமான மருத்துவர் செல்வராஜ் என்பவரின் வீடு மற்றும் மருத்துவமனையிலும் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சற்று முன்னர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நெருக்கமான இளங்கோவன் என்பவர் வீட்டில் சோதனை நடந்து வரும் நிலையில் விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் வீட்டிலும் சோதனை நடந்து வருவதைப் பார்க்கும் போது அதிமுக சுற்றிவளைக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

seithichurul

Trending

Exit mobile version