சினிமா

சர்கார் படத்தின் “சிம்டாங்காரன்“ என்ற பாடல் மீதான விமர்சனத்துக்கு அதிரடி பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்

Published

on

விஜய் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சர்கார் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் படங்களை வெளியிட்டுள்ளது மக்கள் மத்தியில் மிகப் பெரிய வர வேர்ப்பினை பெற்றுள்ளது.

படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். விஜய், கீர்த்திச் சுரேஷ், வரலட்சுமி நடிப்பில் ஏர் முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் சர்கார் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘சிம்டாங்காரன்’ வெளியானது. இப்படத்தின் சிங்கிள் பாடல் 25ம் தேதி மாலை வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த சிம்டாங்காரன் என்கிற பாடல் சமீகத்தில் வெளியிடப்பட்டது. சிம்டாங்காரன் என்றால் கவர்ந்து இழுப்பவன், பயமற்றவன், துடுக்கானவன். கண் சிமிட்டாமல் சிலரைப் பார்க்கத் தோன்றும். அந்த ஒருவன் தான் சிம்டாங்காரன் என்று பாடலாசிரியர் விவேக் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிம்டாங்காரன் பாடல் குறித்த பல்வேறு வகையான விமர்சனத்துக்குப் பதிலளித்துள்ளார். அதில், “விமர்சனங்கள் என் இசை வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

பெரும்பாலான சமயங்களில் என் அனுபவம் காரணமாக மக்களின் கருத்துக்களை நான் கணித்து விடுவேன். சில சமயங்களில் அவர்களுடைய விமர்சனமும் பாராட்டும் என்னை ஆச்சரியப்படுத்தும். ஒரு படத்தின் இயக்குநர், கதாநாயகன், நடன் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோர் கேட்ட பிறகே ஒரு பாடல் வெளிவருகிறது.

இதன் மூலம் ரசிகர்களிடமிருந்து என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள இது உதவுகிறது”என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version