சினிமா செய்திகள்
“ஹிந்தியா… ஆள விடுங்க”- கேள்வி கேட்டவரை மேடையிலேயே கலாய்த்த ஏ.ஆர்.ரகுமான்
இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் தயாரித்துள்ள, ’99 சாங்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்கள், பாடர்கள் மற்றும் பல முக்கியப் புள்ளிகள் பங்கேற்றனர்.
இதுவரை ரகுமான், திரைப்படங்களுக்கு இசையமைக்கு பணிகளையும், தனிப்பட்ட இசை ஆல்பம் வெளியிடுவதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இதைத் தவிர சென்னையில் அவர் இசைப் பள்ளியும் வைத்துள்ளார். ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைக்குப் பணியில் பிஸியாக இருக்கும் ரகுமான், சத்தமில்லாமல் ’99 சாங்ஸ்’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.
‘ஹிந்தியா ஆள விடுங்கடா சாமி…’ ரஹ்மானின் செம்ம கலாய்!#99songs | #ARRahman | #Hindi pic.twitter.com/Lpk6DGpC12
— சினிமா விகடன் (@CinemaVikatan) March 25, 2021
இந்தப் படத்திற்கான கதையையும் ரகுமான் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவே ரகுமான் எழுதி தயாரிக்கும் முதல் படமாகும். இதற்கு முன்னர் அவர் ‘லே மஸ்க்’ என்னும் அதி நவீன தொழில்நுட்பம் பொருந்திய திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்நிலையில் ’99 சாங்ஸ்’ இசை வெளியீட்டு விழாவின் போது, நிருபர் ஒருவர் ரகுமானிடம் தமிழில் ஆரம்பித்து இந்தியில் கேள்வி கேட்கத் தொடங்கினார். அவரை திடீரென்று இடைமறித்த ரகுமான், ‘ஹிந்தியா… ஆள விடுங்க…’ என்று மேடையிலிருந்து இறங்கினார்.
ரகுமானின் இந்த மாஸ் கலாய் மூலம் உற்சாகமடைந்த ரசிகர்கள், ஆரவாரம் செய்தனர். இந்த சம்பவம் குறித்தான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.