தமிழ்நாடு

#GoBackModi ஹேஷ்டேக்: ஓவியா மீது நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார்!

Published

on

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க நேற்று பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார் என்பதும் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. வழக்கம்போல் பிரதமர் மோடி சென்னை வரும்போதெல்லாம் #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்டில் இருக்கும் என்பதும் அந்த டிரெண்டிங் நேற்றும், நேற்று முன்தினமும் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருவருமான ஓவியா, நேற்று முன்தினம் தனது டுவிட்டர் பக்கத்தில் திடீரென #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பதிவுசெய்தார். இந்த பதிவுக்கு ஓவியாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக வக்கீல் அணி காவல் துறையில் புகார் அளித்து உள்ளது. மேலும் அவரது டுவிட்டர் கணக்கை முடக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ் திரை உலகில் உள்ள எந்த நடிகர் நடிகையும் மோடியின் வருகை குறித்து எந்தவித விமர்சனமும் செய்யாதிருக்கும் நிலையில் நடிகை ஓவியா மட்டும் தனது டுவிட்டரில் #GoBackModi என்று பதிவு செய்து சர்ச்சைக்குள்ளாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version