உலகம்

வாடிக்கையாளர்கள், பரிமாறுபவர்கள் என எல்லாமே நிர்வாணம்: ஒரு புதுமை ஓட்டல்!

Published

on

ஸ்பெயின் நாட்டில் புதியதாக திறக்கப்பட்டுள்ள ஒரு ஓட்டலில் வாடிக்கையாளர்களும் நிர்வாணமாக இருக்க வேண்டும் பரிமாறுபவர்களும் நிர்வாணமாக இருப்பார்கள் என்ற வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்பெயின் நாட்டில் திறக்கப்பட்ட ஒரு புதிய ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு தனி அறைகள் கொடுக்கப்படும். அவர்கள் நிர்வாணமாகவே தாங்கள் ஆர்டர் செய்த உணவுகளை சாப்பிடலாம். மேலும் தாங்கள் ஆர்டர் செய்த உணவுகள் ஒரு நிர்வாண உடலின் மீது வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் சென்று அந்த நிர்வாண உடல் மீது வைக்கப்பட்டிருக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டு தனி அறைக்கு செல்லலாம்
இங்கு வரும் தம்பதிகள் வித்தியாசமான அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக இந்த நிர்வாண ஓட்டலை ஆரம்பித்ததாக அந்த ஓட்டல் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர் .

ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை என்னவென்றால் இந்த ஓட்டலுக்கு வாடிக்கையாளர்களாக வருபவர்கள், பரிமாறுபவர்கள், பணிபுரிபவர்கள் என யாருமே செல்போன் உபயோகிக்க கூடாது என்பதுதான்.

நிர்வாணமாக இருப்பதால் அதை செல்போனில் புகைப்படம் எடுத்து தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஓட்டல் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் இந்த ஓட்டலில் தம்பதிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version